caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mujaadila அத்தியாயம், வசனம் 8

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 105 · 58:8

أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُوا۟ عَنِ ٱلنَّجْوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُوا۟ عَنْهُ وَيَتَنَٰجَوْنَ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَإِذَا جَآءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِىٓ أَنفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُ حَسْبُهُمْ جَهَنَّمُ يَصْلَوْنَهَا فَبِئْسَ ٱلْمَصِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionகூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப் பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். பாவத்தையும் வரம்புமீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமன் கூறவில்லையோ அதை முகமன் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள் “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகின்றனர். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்.
Tamil Translation - Omar Sharifகூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் பாவத்தையும் எல்லை மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமனாகக் கூறவில்லையோ அதை முகமனாகக் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள், “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை தண்டனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். ஆக, மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதை நோக்கியே செல்லும் அவர்களை நீர் கவனித்தீரா? பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், (நம்) தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் (கொண்டு, அதாவது: ‘‘அஸ்ஸலாமு அலைக்க' உம்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! என்று கூறுவதற்குப் பதிலாக, ‘‘அஸ்ஸாமு அலைக்க' உமக்கு மரணம் உண்டாவதாக! என்று) கூறிவிட்டு, அவர்கள் தங்களுக்குள் (இவர் உண்மையான தூதராக இருந்தால் ‘‘பரிகாசமாக) நாம் கூறியதைப் பற்றி, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?'' என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதில் அவர்கள் நுழைந்தே தீருவார்கள். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70