يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَنَٰجَيْتُمْ فَلَا تَتَنَٰجَوْا۟ بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَمَعْصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوْا۟ بِٱلْبِرِّ وَٱلتَّقْوَىٰ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவமானதையும் வரம்பு மீறும் காரியத்தையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவ(மான காரிய)த்தையும் (மார்க்க சட்டங்களை) மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். இன்னும், நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்) தூதருக்கு மாறுசெய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் இறையச்சத்திற்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள்.