فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَآسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَٰلِكَ لِتُؤْمِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் (அடிமையை உரிமையிட) வசதி பெறவில்லையோ அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் (கணவன் மனைவி) இருவரும் இணைவதற்கு முன்னர். எவர் (இதற்கு) சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கட்டும். இது ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். நிராகரிப்பாளர்களுக்கு வலி தரக்கூடிய தண்டனை உண்டு.
Tamil Translation - Omar Sharifஆக, எவர் (அடிமையை உரிமையிட) வசதி பெறவில்லையோ அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் (ளிஹார் செய்த அந்த கணவனும் அவரது மனைவியும் இல்லற வாழ்க்கையில்) சேர்வதற்கு முன்னர். ஆக, எவர் (இதற்கு) சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கிறீர்கள் என்பதற்காக ஆகும். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும், துன்புறுத்தும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு.