caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mujaadila அத்தியாயம், வசனம் 3

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 105 · 58:3

وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا۟ فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَآسَّا ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِۦ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎவர் தங்கள் பெண்களிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் தவறை திருத்திக்கொள்ள) மீளுகின்றார்களோ அவர்கள் (கணவன் மனைவி) இருவரும் இணைவதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான், நீங்கள் இதற்கு (-இதை செய்வதற்கு) உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் அந்த தவறை திருத்திக்கொள்வதற்கு) மீளுகிறார்களோ அவர்கள் (-ளிஹார் செய்த அந்த கணவனும் அவருடைய மனைவியும் இல்லற உறவில்) சேர்வதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான் (அல்லாஹ்வின் சட்டம்), நீங்கள் அ(தை செய்வ)தற்கு உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். இதை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70