caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mujaadila அத்தியாயம், வசனம் 5

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 105 · 58:5

إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُوا۟ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ وَقَدْ أَنزَلْنَآ ءَايَٰتٍۭ بَيِّنَٰتٍ وَلِلْكَٰفِرِينَ عَذَابٌ مُّهِينٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுபவர்கள் இவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். நிராகரிப்பாளர்களுக்கு இழிவுதரும் தண்டனை உண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறார்களோ (மாறுசெய்கிறார்களோ, அவர்களின் சட்டங்களை எதிர்க்கிறார்களோ) அவர்கள், அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். இன்னும், திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். இழிவுதரும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi5. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப் படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கிறோம். (அதற்கு) மாறுசெய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70