يُنَادُونَهُمْ أَلَمْ نَكُن مَّعَكُمْ قَالُوا۟ بَلَىٰ وَلَٰكِنَّكُمْ فَتَنتُمْ أَنفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَٱرْتَبْتُمْ وَغَرَّتْكُمُ ٱلْأَمَانِىُّ حَتَّىٰ جَآءَ أَمْرُ ٱللَّهِ وَغَرَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? என்று அவர்களை (நம்பிக்கையாளர்களை) கூவி அழைப்பார்கள். அவர்கள் கூறுவார்கள். ஏன் இல்லை. என்றாலும், (நயவஞ்கசர்களாகிய) நீங்கள் உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) தீமையை எதிர்பார்த்தீர்கள்; (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.
Tamil Translation - Omar Sharif“நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (கூறி) அவர்களை கூவி அழைப்பார்கள். அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) கூறுவார்கள்: “ஏன் இல்லை. என்றாலும், நீங்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; இன்னும், (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) ஆபத்து நிகழ வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; இன்னும், பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi14. இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்க வில்லையா?'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரை, உங்கள் பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான்.