يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ قَدْ جَآءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ ٱلْكِتَٰبِ وَيَعْفُوا۟ عَن كَثِيرٍ قَدْ جَآءَكُم مِّنَ ٱللَّهِ نُورٌ وَكِتَٰبٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும் பலவற்றை விட்டுவிடுவார். இன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர் ஒளி (அதாவது), தெளிவான ஒரு வேதம் உங்களிடம் வந்துவிட்டது.
Tamil Translation - Omar Sharifவேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும், பலவற்றை விட்டுவிடுவார். அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் உங்களிடம் வந்துவிட்டது.
Tamil Translation - Abdulhamid Baqawi15. வேதத்தையுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம் தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக்கொண்டிருந்த பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கிறார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவற்றைக் கூறாது) விட்டுவிடுகிறார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் மிகத்தெளிவான ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது.