وَمِنَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّا نَصَٰرَىٰٓ أَخَذْنَا مِيثَٰقَهُمْ فَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ ٱلْعَدَاوَةَ وَٱلْبَغْضَآءَ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ وَسَوْفَ يُنَبِّئُهُمُ ٱللَّهُ بِمَا كَانُوا۟ يَصْنَعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்த்தவர்கள்” எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். அவர்கள் உபதேசிக்கப்பட்டதிலிருந்து ஒரு பகுதியை மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். அவர்கள் செய்து கொண்டிருந்ததை அல்லாஹ் அவர்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “நிச்சயமாக நாங்கள் கிறித்தவர்கள்’’ எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். ஆக, அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ அதிலிருந்து ஒரு பகுதியை அவர்கள் மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். இன்னும், அவர்கள் செய்து வந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு (மறுமையில் தகுந்த கூலி கொடுப்பதன் மூலம்) அறிவிப்பான்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. எவர்கள் தங்களை ‘‘நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்'' எனக் கூறுகிறார்களோ அவர்களிடமும் (இவ்வாறே) நாம் உறுதிமொழி வாங்கியிருக்கிறோம். எனினும், அவர்களும் (இந்நபியைப் பற்றி தங்கள் வேதத்தில்) தங்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தை மறந்து விட்டார்கள். ஆதலால், அவர்களுக்குள் பகைமையையும் கோபத்தையும் மறுமை நாள் வரை (நீங்காதிருக்கும்படி) மூட்டிவிட்டோம். (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காண்பிப்பான்.