فَبِمَا نَقْضِهِم مِّيثَٰقَهُمْ لَعَنَّٰهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَٰسِيَةً يُحَرِّفُونَ ٱلْكَلِمَ عَن مَّوَاضِعِهِۦ وَنَسُوا۟ حَظًّا مِّمَّا ذُكِّرُوا۟ بِهِۦ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَىٰ خَآئِنَةٍ مِّنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَٱعْفُ عَنْهُمْ وَٱصْفَحْ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம், அவர்களுடைய உள்ளங்களை இறுக்கமானதாக ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மை) இடங்களிலிருந்து புரட்டுகிறார்கள். அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பாகத்தை மறந்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர அ(திகமான)வர்களிடமிருந்து மோசடியை (நீர்) கண்டுகொண்டே இருப்பீர். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக; புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்களை நேசிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம்; இன்னும், அவர்களுடைய உள்ளங்களை இறுகியதாக (கடினமானதாக) ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மையான) இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) புரட்டுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பகுதியை மறந்தார்கள். இன்னும், அவர்களில் சிலரைத் தவிர அவர்களிடம் மோசடியை (நீர்) தொடர்ந்து பார்ப்பவராக இருப்பீர். ஆக, அவர்களை மன்னிப்பீராக; இன்னும், புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்கள் மீது அன்பு வைக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. அவர்கள் தங்கள் உறுதிமொழிக்கு மாறு செய்ததன் காரணமாக நாம் அவர்களைச் சபித்து, அவர்களுடைய உள்ளங்களை இறுகச்செய்து விட்டோம். அவர்கள் (தங்கள் வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தங்களிலிருந்து புரட்டுகிறார்கள். (நமது இந்நபியைப் பற்றி) அதில் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்த பாகத்தையும் மறந்து விட்டார்கள். ஆகவே, (நபியே!) சிலரைத் தவிர அவர்களி(ல் பெரும்பாலோரி)ன் மோசடியை(ப் பற்றிய செய்தியை) நீர் அடிக்கடி கேள்விப்பட்டு வருவீர். ஆகவே, இவர்களை நீர் மன்னித்துப் புறக்கணித்து வருவீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய பண்புடையவர்களை நேசிக்கிறான்.