caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 117

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:117

مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَآ أَمَرْتَنِى بِهِۦٓ أَنِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ رَبِّى وَرَبَّكُمْ وَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًا مَّا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِى كُنتَ أَنتَ ٱلرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீ எனக்கு ஏவிய, “என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தவரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியபோது நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.
Tamil Translation - Omar Sharif“நீ எனக்கு ஏவியதை, அதாவது, என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதைத் தவிர (என்னை வணங்கும்படி) அவர்களுக்கு நான் கூறவில்லை. இன்னும், நான் அவர்களுடன் இருந்த வரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். ஆக, நீ என்னைக் கைப்பற்றியபோது (-என்னை நீ வானத்தில் உயர்த்திவிட்டபோது) நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi117. நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70