قُلْ مَا كُنتُ بِدْعًا مِّنَ ٱلرُّسُلِ وَمَآ أَدْرِى مَا يُفْعَلُ بِى وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَىٰٓ إِلَىَّ وَمَآ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. எனக்கு என்ன செய்யப்படும் உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகின்றதோ அதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! “நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. இன்னும், எனக்கு என்ன செய்யப்படும், உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi9. (நபியே! அவர்களை நோக்கி, மேலும்) கூறுவீராக: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) மேலும், என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹ்யி மூலமாக அறிவிக்கப்பட்டவற்றை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.