caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ahqaf அத்தியாயம், வசனம் 10

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 66 · 46:10

قُلْ أَرَءَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ ٱللَّهِ وَكَفَرْتُم بِهِۦ وَشَهِدَ شَاهِدٌ مِّنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ عَلَىٰ مِثْلِهِۦ فَـَٔامَنَ وَٱسْتَكْبَرْتُمْ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! இது (-இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருந்தால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்ற ஒன்றுக்கு சாட்சியும் கூறி, (அவர் இதை) நம்பிக்கை கொண்டிருக்க, (ஆனால்,) நீங்களோ பெருமை அடித்து, இதை நீங்கள் நிராகரித்து விட்டால்... (இதை விட பெரிய அநியாயம் வேறென்ன இருக்க முடியும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக! இ(ந்த வேதமான)து (உண்மையில்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருக்கிறது, நீங்கள் அதை நிராகரித்துவிட்டீர்கள். ஆனால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு (-இதில் முஹம்மத் நபியைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதைப் போன்று முந்திய வேதம் தவ்ராத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு) சாட்சி கூறினார். ஆக, (அவர் இந்த நபியை) நம்பிக்கை கொண்டு விட்டார். ஆனால், நீங்களோ (அவரை ஏற்றுக் கொள்ளாமல்) பெருமை அடித்து (நிராகரித்து) விட்டீர்கள். (இதை விட பெரிய அநியாயம், பெரிய நிராகரிப்பு வேறு என்ன இருக்கும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi10. (நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70