بَلْ مَتَّعْتُ هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ جَآءَهُمُ ٱلْحَقُّ وَرَسُولٌ مُّبِينٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(இவர்களை நாம் அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தேன். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. தெளிவான தூதரும் (அவர்களிடம் வந்தார்).
Tamil Translation - Omar Sharif(இவர்களை நாம் உடனே அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. இன்னும், தெளிவான தூதரும் அவர்களிடம் வந்தார்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. (ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் மூதாதையாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நமது இந்தத்) தூதரும் வருகின்றவரை, அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன்.