وَجَعَلَهَا كَلِمَةًۢ بَاقِيَةً فِى عَقِبِهِۦ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇதை (-“அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை” என்பதை) தனது சந்ததிகளில் நீடித்து இருக்கின்ற ஒரு வாக்கியமாக - சட்டமாக அவர் ஆக்கினார், அவர்கள் (தங்கள் இறைவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இதை (-அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை என்ற தூய கொள்கையை) தனது சந்ததிகளில் நீடித்து நிற்கின்ற ஒரு (கொள்கை) வாக்கியமாக அவர் ஆக்கினார், அவர்கள் (எல்லா தவறான கொள்கையிலிருந்து விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi28. ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) அவர்கள் திரும்பவரும் பொருட்டு, அவர் தன் சந்ததிகளில் இக்கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார்.