caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:13

شَرَعَ لَكُم مِّنَ ٱلدِّينِ مَا وَصَّىٰ بِهِۦ نُوحًا وَٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِۦٓ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ وَعِيسَىٰٓ أَنْ أَقِيمُوا۟ ٱلدِّينَ وَلَا تَتَفَرَّقُوا۟ فِيهِ كَبُرَ عَلَى ٱلْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ ٱللَّهُ يَجْتَبِىٓ إِلَيْهِ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَن يُنِيبُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்யி அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! (அதன்படி செயல்படுங்கள்!) அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ் தன் பக்கம் தான் நாடுகின்றவர்களை தேர்ந்தெடுக்கின்றான். (வணக்க வழிபாட்டின் பக்கம்) திரும்புகின்றவர்களுக்கு அவன் தன் பக்கம் வழி காட்டுகின்றான்.
Tamil Translation - Omar Sharifஅவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்யி அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். (தன் பக்கம்) திரும்பக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் (நெருங்குவதற்குரிய) நேர்வழி காட்டுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதை அவன் உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கிறான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிப்பதும், இப்றாஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், ‘‘நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை எதன் பக்கம் நீங்கள் அழைக்கிறீர்களோ அ(ந்த ஓரிறை கொள்கையான)து, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர்களையே தன் பக்கம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். தன்னை முன்னோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70