caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:14

وَمَا تَفَرَّقُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى لَّقُضِىَ بَيْنَهُمْ وَإِنَّ ٱلَّذِينَ أُورِثُوا۟ ٱلْكِتَٰبَ مِنۢ بَعْدِهِمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதங்களிடம் கல்வி வந்ததன் பின்னரே தவிர அவர்கள் (தங்களுக்குள்) பல பிரிவுகளாக பிரியவில்லை. (அவர்கள் அவ்வாறு பிரிந்தது தங்களுக்கு மத்தியில்) பொறாமையினால்தான். ஒரு குறிப்பிட்ட தவணை வரை (மறுமை வரை அவன் தனது தண்டனையை உங்களுக்கு பிற்படுத்துவான் என்ற) ஒரு வாக்கு உமது இறைவன் புறத்தில் இருந்து முந்தி இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இப்போதே இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். (அவர்களது கதை முடிக்கப்பட்டிருக்கும்.) நிச்சயமாக, இவர்களுக்குப் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (-யூதர்களும் கிறித்தவர்களும்) அதில் (-நூஹு, மற்ற நபிமார்கள், மற்றும் உமக்கு நாம் உபதேசித்ததில்) பெரிய சந்தேகத்தில் இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharifதங்களிடம் கல்வி வந்ததன் பின்னரே தவிர அவர்கள் (தங்களுக்குள்) பல பிரிவுகளாக பிரியவில்லை. (அவர்கள் அவ்வாறு பிரிந்தது) தங்களுக்கு மத்தியில் இருந்த பொறாமையினால்தான். ஒரு குறிப்பிட்ட தவணை(யாகிய மறுமை நாள் வரும்) வரை (அவன் தனது தண்டனையை உங்களுக்கு பிற்படுத்துவான் என்ற) ஒரு வாக்கு உமது இறைவன் புறத்தில் இருந்து முன் சென்று இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். (அவர்களது கதை முடிக்கப்பட்டிருக்கும்.) நிச்சயமாக, இவர்களுக்குப் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அதில்பெரிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. அவர்கள் தங்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னரும், தங்களுக்கு இடையிலுள்ள பொறாமையின் காரணமாகவே தவிர (உண்மையிலிருந்து) அவர்கள் பிரிந்துவிடவில்லை. (அவர்களுக்குத் தீர்ப்பளிப்பது) ஒரு குறிப்பிட்ட தவணையில்தான் என்று உமது இறைவனுடைய வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களுடைய காரியம் (இதுவரை)முடிவுபெற்றே இருக்கும். மேலும், அவர்களுக்குப் பின்னர், எவர்கள் அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கப்பட்டார்களோ அவர்களும், நிச்சயமாக இதில் பெரும் சந்தேகத்தில்தான் ஆழ்ந்து கிடக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70