caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ash-Shura அத்தியாயம், வசனம் 12

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 62 · 42:12

لَهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவானங்கள் இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் அவனுக்கே உரியன. அவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகின்றான்; (தான் நாடியவர்களுக்கு) சுருக்குகின்றான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifவானங்கள் இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் அவனுக்கே உரியன. அவன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை) சுருக்குகிறான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. வானங்கள், பூமியின் (பொக்கிஷங்களின்) சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (அவன் விரும்பியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் சகல வஸ்துக்களையும் (மக்களின் தன்மைகளையும்) நன்கறிந்தவன். (ஆகவே, அவர்களின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70