caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Ghaafir அத்தியாயம், வசனம் 7

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 60 · 40:7

ٱلَّذِينَ يَحْمِلُونَ ٱلْعَرْشَ وَمَنْ حَوْلَهُۥ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُونَ بِهِۦ وَيَسْتَغْفِرُونَ لِلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَٱغْفِرْ لِلَّذِينَ تَابُوا۟ وَٱتَّبَعُوا۟ سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ ٱلْجَحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅர்ஷை சுமப்பவர்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழை துதிக்கின்றனர். அவனை நம்பிக்கை கொள்கின்றனர். நம்பிக்கை கொண்டவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருகின்றனர், “எங்கள் இறைவா! எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (தவறுகளை விட்டு) திருந்தி, உனது பாதையை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டு பாதுகாப்பாயாக!”
Tamil Translation - Omar Sharifஅர்ஷை சுமப்பவர்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழை துதிக்கிறார்கள். இன்னும், அவனை நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருகிறார்கள், “எங்கள் இறைவா! எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (இணைவைப்பு, நிராகரிப்பு, இன்னும் பாவங்களை விட்டு) திருந்தி, உன் பக்கம் திரும்பி, உனது மார்க்கத்தை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பாயாக!”
Tamil Translation - Abdulhamid Baqawi7. எவர்கள், ‘அர்ஷை' சுமந்து கொண்டும், அதைச் சூழவும் இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கைகொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும், ‘‘எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்துக் கொண்டும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70