رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّٰتِ عَدْنٍ ٱلَّتِى وَعَدتَّهُمْ وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّٰتِهِمْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் நுழைப்பாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய். இன்னும் அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களையும் (சொர்க்கங்களில் நுழைப்பாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஎங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கிறாய். இன்னும், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்கள் அனைவரையும் (சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. ‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவன்'' என்றும்,