caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 97

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:97

إِنَّ ٱلَّذِينَ تَوَفَّىٰهُمُ ٱلْمَلَٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ قَالُوا۟ فِيمَ كُنتُمْ قَالُوا۟ كُنَّا مُسْتَضْعَفِينَ فِى ٱلْأَرْضِ قَالُوٓا۟ أَلَمْ تَكُنْ أَرْضُ ٱللَّهِ وَٰسِعَةً فَتُهَاجِرُوا۟ فِيهَا فَأُو۟لَٰٓئِكَ مَأْوَىٰهُمْ جَهَنَّمُ وَسَآءَتْ مَصِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக எவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, (அவர்களிடம் “மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?” என்று கூற, (அதற்கவர்கள்) “இந்த பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (இருந்த இடத்தை விட்டு) அதில் ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் (மிகக்) கெட்டுவிட்டது!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, அவர்களிடம் - (“மார்க்கக் கட்டளையை நிறைவேற்றி ஹிஜ்ரத் செய்யாமல்) - நீங்கள் எவ்வாறு (தங்கி) இருந்தீர்கள்?” என்று வானவர்கள் கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (வசித்த நெருக்கடியான இடத்திலிருந்து) அதில் (பூமியில் வேறு பகுதிக்கு) ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இத்தகையவர்கள் அவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது (மிகக்) கெட்ட மீளுமிடமாகும்!
Tamil Translation - Abdulhamid Baqawi97. எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70