لَّا يَسْتَوِى ٱلْقَٰعِدُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ غَيْرُ أُو۟لِى ٱلضَّرَرِ وَٱلْمُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى ٱلْقَٰعِدِينَ دَرَجَةً وَكُلًّا وَعَدَ ٱللَّهُ ٱلْحُسْنَىٰ وَفَضَّلَ ٱللَّهُ ٱلْمُجَٰهِدِينَ عَلَى ٱلْقَٰعِدِينَ أَجْرًا عَظِيمًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களில் குறையுடையோர் அல்லாத (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களும், தங்கள் செல்வங்களைக் கொண்டும், தங்கள் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களைக் கொண்டும் தங்கள் உயிர்களைக் கொண்டும் போரிடுபவர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். போராளிகளை மகத்தான கூலியால் தங்கியவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கினான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கிய உடல் குறையுடையோர் அல்லாதவர்கள் இன்னும் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடும் வீரர்கள் (ஆகிய இவர்கள்) சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடும் வீரர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். இன்னும், போரிடும் வீரர்களை மகத்தான கூலியால் (போருக்கு செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களை விட அல்லாஹ் மேன்மையாக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi95. நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கிறான்.