أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ ءَامَنُوا۟ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوٓا۟ إِلَى ٱلطَّٰغُوتِ وَقَدْ أُمِرُوٓا۟ أَن يَكْفُرُوا۟ بِهِۦ وَيُرِيدُ ٱلشَّيْطَٰنُ أَن يُضِلَّهُمْ ضَلَٰلًۢا بَعِيدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று எண்ணுபவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்புத் தேடிச் செல்ல நாடுகின்றனர். அவர்கள் அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளனர். ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று வெளி பாசாங்கு செய்பவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்பு கேட்டுச் செல்ல நாடுகிறார்கள். அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi60. (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான்.