وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا۟ إِلَىٰ مَآ أَنزَلَ ٱللَّهُ وَإِلَى ٱلرَّسُولِ رَأَيْتَ ٱلْمُنَٰفِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version"(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணிப்பதையே நீர் காண்பீர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “(நீதமான தீர்ப்பை நாடி) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)’’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை - அவர்கள் உம்மை முற்றிலும் புறக்கணித்து விலகி செல்வதையே - நீர் காண்பீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi61. ‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகி விடுவதையே நீர் காண்பீர்.