caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 5

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:5

وَلَا تُؤْتُوا۟ ٱلسُّفَهَآءَ أَمْوَٰلَكُمُ ٱلَّتِى جَعَلَ ٱللَّهُ لَكُمْ قِيَٰمًا وَٱرْزُقُوهُمْ فِيهَا وَٱكْسُوهُمْ وَقُولُوا۟ لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அநாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் செல்வங்களை புத்திக் குறைவானவர்களுக்கு கொடுக்காதீர்கள். அவற்றில் அவர்களுக்கு உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள், அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லைக் கூறுங்கள்!
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அனாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் (அனாதைகளின்) செல்வங்களை (அவர்களில் யார்) புத்தி குறைவானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் கொடுக்காதீர்கள். இன்னும், அவற்றில் அவர்களுக்கு நீங்களே உணவளியுங்கள். இன்னும், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள். இன்னும், (அவர்கள் தங்கள் செல்வத்தை கேட்டால் செல்வத்தை நிர்வகிக்கும் அறிவுத் திறமை உங்களுக்கு வந்தவுடன் உங்கள் செல்வத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று) நல்ல சொல்லை அவர்களுக்குச் சொல்லுங்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi5. (அநாதைகளின் பொருளுக்குப் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70