وَءَاتُوا۟ ٱلنِّسَآءَ صَدُقَٰتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيٓـًٔا مَّرِيٓـًٔا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கடமையாக (மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) மனதால் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக அதை புசியுங்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கட்டாயக் கடமையாக (மனமுவந்து மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) அவர்கள் மனம் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக (அவர்கள் விட்டுக் கொடுத்த) அதை புசியுங்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்.