caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 43

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:43

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَقْرَبُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنتُمْ سُكَٰرَىٰ حَتَّىٰ تَعْلَمُوا۟ مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِى سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا۟ وَإِن كُنتُم مَّرْضَىٰٓ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَآءَ أَحَدٌ مِّنكُم مِّنَ ٱلْغَآئِطِ أَوْ لَٰمَسْتُمُ ٱلنِّسَآءَ فَلَمْ تَجِدُوا۟ مَآءً فَتَيَمَّمُوا۟ صَعِيدًا طَيِّبًا فَٱمْسَحُوا۟ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ ٱللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவதை அறியும் வரை நீங்கள் போதை ஏறியவர்களாக இருக்கும் போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். இன்னும் (நீங்கள்) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). (ஆனால்) பயணிகளாக இருந்தால் தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாக அல்லது பயணத்தில் இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் (கழித்து) வந்தால் அல்லது பெண்களோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற்றுக்கொள்ள வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பிழைபொறுப்பவனாக, அதிகம் மன்னிப்பவனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையுற்றவர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை தெளிவாக அறிகின்ற (சுதாரிப்பு நிலைக்கு நீங்கள் வருகின்ற) வரை தொழுகையை நெருங்காதீர்கள். இன்னும், (நீங்கள் பெருந்தொடக்குள்ள) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகையை நெருங்காதீர்கள்). (ஆனால்) நீங்கள் பயணிகளாக இருந்தால் தவிர. இன்னும், நீங்கள் நோயாளிகளாக இருந்தால்; அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம் கழித்து வந்தால்; அல்லது, மனைவிகளோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட கைகள் மூலம்) உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்கள் அனைத்தையும்) முற்றிலும் மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi43. நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். தவிர, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக் கழித்தோ, பெண்களைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (பிறகு, சுத்தம் செய்துகொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் துடைத்து ‘‘தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (பிறகு, தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, குற்றங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70