وَكَيْفَ تَأْخُذُونَهُۥ وَقَدْ أَفْضَىٰ بَعْضُكُمْ إِلَىٰ بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَٰقًا غَلِيظًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் சிலர் சிலருடன் கலந்து விட்(டு உறவு கொண்)டிருக்க, (அப்பெண்கள்) உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்க அதை எவ்வாறு எடுப்பீர்கள்?
Tamil Translation - Omar Sharifஉங்களில் சிலர் சிலருடன் (அன்போடும் அந்தரங்க வாழ்க்கையில் அன்னியோனியமாகவும் வாழ்ந்து ஒருவர் மற்றவருடன்) கலந்து விட்டிருக்கும் நிலையில்; இன்னும், அப்பெண்கள் உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்கும் நிலையில் அதை எவ்வாறு நீங்கள் (திரும்ப) கைப்பற்றுவீர்கள்?
Tamil Translation - Abdulhamid Baqawi21. அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே!