caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 22

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:22

وَلَا تَنكِحُوا۟ مَا نَكَحَ ءَابَآؤُكُم مِّنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُۥ كَانَ فَٰحِشَةً وَمَقْتًا وَسَآءَ سَبِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர உங்கள் தந்தைகள் மணம் புரிந்தவர்களை மணம் புரியாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் அது கெட்ட பழக்கமாகும்.
Tamil Translation - Omar Sharifமுன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர, (இஸ்லாம் வந்த பின்னர்) உங்கள் தந்தைகள் மணமுடித்தவர்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் இது கெட்ட பழக்கமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi22. முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக்கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70