caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 20

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:20

وَإِنْ أَرَدتُّمُ ٱسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَءَاتَيْتُمْ إِحْدَىٰهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا۟ مِنْهُ شَيْـًٔا أَتَأْخُذُونَهُۥ بُهْتَٰنًا وَإِثْمًا مُّبِينًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு மனைவியின் இடத்தில் (வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால், அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் எடுக்காதீர்கள். (அதுவோ) அபாண்டமாகவும் பகிரங்கமான பாவமாகவும் (இருக்க) அதை நீங்கள் எடுக்கிறீர்களா?
Tamil Translation - Omar Sharifநீங்கள் ஒரு மனைவியின் இடத்தில் (அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால் (-வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க நாடினால்), அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) கைப்பற்றாதீர்கள். அதுவோ அபாண்டமாகவும் வெளிப்படையான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் கைப்பற்றுகிறீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi20. ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70