caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 157

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:157

وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا ٱلْمَسِيحَ عِيسَى ٱبْنَ مَرْيَمَ رَسُولَ ٱللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَٰكِن شُبِّهَ لَهُمْ وَإِنَّ ٱلَّذِينَ ٱخْتَلَفُوا۟ فِيهِ لَفِى شَكٍّ مِّنْهُ مَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِلَّا ٱتِّبَاعَ ٱلظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًۢا

Tamil Translation - Omar Sharif - Abridged Version“அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொல்லவில்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று ஒருவன்) தோற்றமாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் (உண்மைக்கு) முரண்பட்டவர்கள் அதில் சந்தேகத்தில்தான் இருக்கின்றனர். சந்தேகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு வேறு ஓர் அறிவும் இல்லை. உறுதியாக அவர்கள் அவரைக் கொல்லவில்லை.
Tamil Translation - Omar Sharifஇன்னும், “அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவுமில்லை. இன்னும், அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று) ஒருவன் தோற்றமாக்கப்பட்டான். (அவனைதான் அவர்கள் கொன்றார்களே தவிர, ஈஸாவை அல்ல.) இன்னும் நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அதில் (பெரிய) சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள். யூகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை. இன்னும், உறுதியாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi157. மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70