وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَٰحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ وَخُذُوا۟ حِذْرَكُمْ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுக்கவும். அவர்கள் (உம்முடன் தொழுது) சஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கவும். தொழாமலிருந்த மற்றொரு பிரிவு வரவும், உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்பையும், தங்கள் ஆயுதங்களையும் எடுக்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்றுவிட வேண்டுமே! என்று நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி கவனமற்றால்) உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து விடுவார்கள். மழையின் காரணமாக சிரமம் உங்களுக்கு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் தற்காப்பை எடுங்கள் (உஷாராக இருங்கள்). நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு இழிவான வேதனையை ஏற்படுத்தினான்.
Tamil Translation - Omar Sharif(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு நீர் தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆக, அவர்கள் (உம்முடன் தொழுது) ஸஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இரு(ந்து உங்களை பாதுகா)க்கவும். இன்னும், தொழாமலிருந்த மற்றொரு பிரிவு (தொழுகைக்கு) வரவும். ஆக, உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்புகளையும், தங்கள் (போர்) ஆயுதங்களையும் எடு(த்து தங்களுடன் வைத்திரு)க்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்று இருப்பதையே நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி நீங்கள் கவனமற்று இருந்தால்,) அவர்கள் உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து (தாக்கி) விடுவார்கள். இன்னும், மழையின் காரணமாக உங்களுக்கு சிரமம் இருந்தால்; அல்லது, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் (தொழும்போது) உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் (கேடயம், சிறு கத்தி போன்ற) தற்காப்புகளை (எப்போதும்) எடு(த்து வைத்துக் கொண்டு உஷாராக இரு)ங்கள். நிச்சயமாக அல்லாஹ் இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi102. (நபியே! போர் முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கைகளில்) தங்கள் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) ‘ஸஜ்தா' செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கைகளில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டுமென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினால் அல்லது நீங்கள் நோயாளிகளாகவோ இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் (கைகளில் பிடிக்க முடியாவிட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.