وَإِذَا ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا۟ مِنَ ٱلصَّلَوٰةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنَّ ٱلْكَٰفِرِينَ كَانُوا۟ لَكُمْ عَدُوًّا مُّبِينًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை (-உங்களை தாக்குவதை) நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான எதிரிகளாக இருக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi101. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்தால் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் தொழுகையை ‘கஸ்ர்' செய்வது (சுருக்கிக் கொள்வது) உங்கள் மீது குற்றமாகாது. ஏனெனில், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.