بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱتَّقُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَآءً وَٱتَّقُوا۟ ٱللَّهَ ٱلَّذِى تَسَآءَلُونَ بِهِۦ وَٱلْأَرْحَامَ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரப்பினான். அல்லாஹ்வையும் இரத்த பந்தங்களையும் அஞ்சுங்கள். அவனைக் கொண்டே உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Omar Sharifமனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். இன்னும், அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் (இவ்வுலகத்தின் பல பாகங்களில்) பரப்பினான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் மூலமாகவே உங்களுக்குள் (தேவைகளை ஒருவர் மற்றவரிடம்) கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும், இரத்த உறவுகளை முறிப்பதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்.