caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 2

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:2

وَءَاتُوا۟ ٱلْيَتَٰمَىٰٓ أَمْوَٰلَهُمْ وَلَا تَتَبَدَّلُوا۟ ٱلْخَبِيثَ بِٱلطَّيِّبِ وَلَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَهُمْ إِلَىٰٓ أَمْوَٰلِكُمْ إِنَّهُۥ كَانَ حُوبًا كَبِيرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅநாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுங்கள். (அதிலுள்ள) நல்லதிற்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அனாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுத்துவிடுங்கள். இன்னும், (அதிலுள்ள) உயர்ந்ததை (நீங்கள்) எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக (உங்களிடமுள்ள) மட்டமானதை (அவர்களுக்கு) கொடுக்காதீர்கள். இன்னும், அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi2. நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்கள் பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70