خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلْأَنْعَٰمِ ثَمَٰنِيَةَ أَزْوَٰجٍ يَخْلُقُكُمْ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ خَلْقًا مِّنۢ بَعْدِ خَلْقٍ فِى ظُلُمَٰتٍ ثَلَٰثٍ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَأَنَّىٰ تُصْرَفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் ஒரு படைப்பாக படைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதை விட்டும்) திருப்பப்படுகிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஅவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். இன்னும், அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் இன்னொரு படைப்பாக படைக்கிறான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை விட்டு வேறு ஒன்றை வணங்குவதற்காக திசைத்) திருப்பப்படுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதரிலிருந்து தான் படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கிறான்.) மேலும், (உங்கள் நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கிறான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். இந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கே உரியன. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?