إِن تَكْفُرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنكُمْ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ ٱلْكُفْرَ وَإِن تَشْكُرُوا۟ يَرْضَهُ لَكُمْ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டு தேவை அற்ற முழு நிறைவானவன். அவன் தனது அடியார்களுக்கு நிராகரிப்பை விரும்ப மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதை விரும்புவான். பாவியான ஓர் ஆன்மா இன்னொரு ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பிறகு உங்கள் இறைவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கின்றது. அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharifநீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் - (எல்லா வகையிலும் அவன்) நிறைவானவன். அவன் தனது அடியார்களுக்கு நிராகரிப்பை விரும்ப மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதை விரும்புவான். பாவியான ஓர் ஆன்மா இன்னொரு (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பிறகு, உங்கள் இறைவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்.