خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّٰرُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகின்றான். இரவின் மீது பகலை சுருட்டுகின்றான். சூரியனை சந்திரனை அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.
Tamil Translation - Omar Sharifஅவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.