caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Az-Zumar அத்தியாயம், வசனம் 29

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 59 · 39:29

ضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلًا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ٱلْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். ஒரு மனிதன் அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கின்றனர். (இது இணைவைப்பவனின் உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர், அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இவர் நம்பிக்கையாளருக்கு ஒப்பானவர்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா? எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். ஒரு மனிதன் இருக்கிறான். அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கிறார்கள். (இது இணைவைப்பவனுக்கான உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர் இருக்கிறார். அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இது நம்பிக்கையாளருக்கான உதாரணமாகும்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா? எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (தங்கள் வழிகேட்டை) அறியமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்து கொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் தன்மையால் சமமாவார்களா? (ஆகமாட்டார்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை கூட) அறிந்து கொள்ளவில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70