لَقَدْ كَانَ لِسَبَإٍ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸபா நகர மக்களுக்கு அவர்களின் தங்குமிடத்தில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் என இரண்டு தோட்டங்கள் (அவர்களுக்கு) இருந்தன. (ஸபா வாசிகளே!) உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (உங்கள் ஊரும்) நல்ல ஊர். (உங்கள் இறைவனும்) மகா மன்னிப்பாளனாகிய இறைவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஸபா நகர மக்களுக்கு அவர்களின் தங்குமிடத்தில் ஓர் அத்தாட்சி திட்டவட்டமாக இருக்கிறது. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் என இரண்டு தோட்டங்கள் (அவர்களுக்கு) இருந்தன. (ஸபா வாசிகளே!) உங்கள் இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (உங்கள் ஊரும்) நல்ல ஊர். (உங்கள் இறைவனும்) மகா மன்னிப்பாளனாகிய இறைவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. மெய்யாகவே ‘ஸபா'வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. ‘‘ உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவற்றைப் புசியுங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு'' (எனவும் கூறப்பட்டது).