caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 14

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:14

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟ فِى ٱلْعَذَابِ ٱلْمُهِينِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவருக்கு மரணத்தை நாம் முடிவு செய்தபோது அவர் மரணித்துவிட்டதை அவர்களுக்கு அவருடைய தடியை தின்ற கரையானைத் தவிர (வேறு ஏதும்) அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்தபோது, “தாங்கள் மறைவானவற்றை அறிந்துகொண்டிருந்தால் இழிவான வேதனையில் தங்கி இருந்திருக்க மாட்டார்கள்” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிய வந்தது.
Tamil Translation - Omar Sharifஆக, அவருக்கு மரணத்தை நாம் முடிவு செய்(து அவரும் மரணித்)தபோது அவர் மரணம் எய்தியதை அவருடைய தடியை தின்ற கரையானைத் தவிர (வேறு எதுவும்) அவர்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்தபோது, “தாங்கள் மறைவானவற்றை அறிந்திருந்தால் மிக இழிவான தண்டனையில் தங்கி இருந்திருக்க மாட்டார்கள்” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிய வந்தது.
Tamil Translation - Abdulhamid Baqawi14. ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70