فَأَعْرَضُوا۟ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ ٱلْعَرِمِ وَبَدَّلْنَٰهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆனால், அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கின்ற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களுக்குப் பதிலாக (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களை உடைய, காய்க்காத மரங்களை உடைய, இன்னும் மிகக்குறைவான சில இலந்தை மரங்களை உடைய இரண்டு தோட்டங்களை மாற்றிவிட்டோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கிற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களை (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களையும், காய்க்காத மரங்களையும், மிகக் குறைவான சில இலந்தை மரங்களையும் உடைய இரண்டு தோட்டங்களாக மாற்றிவிட்டோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை உடைக்கக்கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பிவைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களாலும், சில இலந்தை மரங்களாலும் நிரம்பிய தோப்புகளாக மாற்றிவிட்டோம்.