caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 75

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:75

وَمِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ مَنْ إِن تَأْمَنْهُ بِقِنطَارٍ يُؤَدِّهِۦٓ إِلَيْكَ وَمِنْهُم مَّنْ إِن تَأْمَنْهُ بِدِينَارٍ لَّا يُؤَدِّهِۦٓ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآئِمًا ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا۟ لَيْسَ عَلَيْنَا فِى ٱلْأُمِّيِّـۧنَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நீர்) ஒரு பொற்குவியலில் அவரை நம்பினாலும் (குறைவின்றி) உமக்கு அதை நிறைவேற்றுபவரும் வேதக்காரர்களில் இருக்கிறார். (ஓரே) ஒரு நாணயத்தில் நீர் அவரை நம்பினாலும் அதை உமக்கு (திரும்ப) நிறைவேற்றாதவரும் அவர்களில் இருக்கிறார். அவரிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர (அதை கொடுக்க மாட்டார்). இது, (யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை என்று நிச்சயமாக அவர்கள் கூறிய காரணத்தாலாகும். அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifவேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். (நீர்) ஒரு பொற்குவியலை அவர்களிடம் நம்பி கொடுத்தாலும் (குறைவின்றி) உமக்கு அதை அவர்கள் (திரும்ப) ஒப்படைத்துவிடுவார்கள். இன்னும், அவர்களில் சிலர் இருக்கிறார்கள். ஒரு தீனார் நாணயத்தை நீர் அவர்களிடம் நம்பி ஒப்படைத்தாலும் அதை உமக்கு அவர்கள் (திரும்ப) ஒப்படைக்க மாட்டார்கள், அவர்களிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர. அதற்கு காரணமாவது, “(யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi75. (நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (ஒரு குறைவுமின்றி) உம்மிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீர் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். இதன் காரணம்: (தங்கள் இனம் அல்லாத மற்ற) ‘‘பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை'' என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (அல்லாஹ் தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70