caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 18

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:18

شَهِدَ ٱللَّهُ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ وَٱلْمَلَٰٓئِكَةُ وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ قَآئِمًۢا بِٱلْقِسْطِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: "நிச்சயமாக அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை." இன்னும் வானவர்கள், கல்விமான்கள் (இதற்கு சாட்சி கூறுகின்றனர்). மிகைத்தவன், ஞானவான் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை.
Tamil Translation - Omar Sharifநீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi18. (நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: ‘‘நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறுயாரும் (இல்லவே) இல்லை.'' அப்படியே வானவர்களும் (வேதத்தை கற்றுத் தேர்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70