caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 181

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:181

لَّقَدْ سَمِعَ ٱللَّهُ قَوْلَ ٱلَّذِينَ قَالُوٓا۟ إِنَّ ٱللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَآءُ سَنَكْتُبُ مَا قَالُوا۟ وَقَتْلَهُمُ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஏழை; நாங்கள் சீமான்கள்" என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் கேட்டான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். "எரிக்கும் வேதனையை சுவையுங்கள்" எனக் கூறுவோம்.
Tamil Translation - Omar Sharif“நிச்சயமாக அல்லாஹ் ஏழையாவான். இன்னும், நாங்கள் செல்வந்தர்கள்’’ என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். இன்னும், “எரித்து பொசுக்கும் தண்டனையை சுவையுங்கள்’’ என்று கூறுவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi181. எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இப்படி) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்கிறோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்'' என நாம் கூறுவோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70