caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 167

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:167

وَلِيَعْلَمَ ٱلَّذِينَ نَافَقُوا۟ وَقِيلَ لَهُمْ تَعَالَوْا۟ قَٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ أَوِ ٱدْفَعُوا۟ قَالُوا۟ لَوْ نَعْلَمُ قِتَالًا لَّٱتَّبَعْنَٰكُمْ هُمْ لِلْكُفْرِ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنْهُمْ لِلْإِيمَٰنِ يَقُولُونَ بِأَفْوَٰهِهِم مَّا لَيْسَ فِى قُلُوبِهِمْ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يَكْتُمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், நயவஞ்சகர்களை (நம்பிக்கையாளர்களில் இருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது). இன்னும், “வாருங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லது, (அந்த நிராகரிப்பவர்களைத்) தடுங்கள்” என்று அ(ந்த நயவஞ்சகம் உடைய)வர்களுக்கு கூறப்பட்டது. (அதற்கு) “போர் என்று (இதை) நாங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பின்பற்றி (போருக்கு வந்து) இருப்போம்” என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை தங்கள் வாய்களால் கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நயவஞ்சகர்களை (நம்பிக்கையாளர்களில் இருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது). இன்னும், “வாருங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லது, (அந்த நிராகரிப்பவர்களைத்) தடுங்கள்” என்று அ(ந்த நயவஞ்சகம் உடைய)வர்களுக்கு கூறப்பட்டது. (அதற்கு) “போர் என்று (இதை) நாங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பின்பற்றி (போருக்கு வந்து) இருப்போம்” என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை தங்கள் வாய்களால் கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi167. (நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ‘‘(இதை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70