ٱلَّذِينَ قَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ وَقَعَدُوا۟ لَوْ أَطَاعُونَا مَا قُتِلُوا۟ قُلْ فَٱدْرَءُوا۟ عَنْ أَنفُسِكُمُ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நயவஞ்சகர்கள் தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (கொல்லப்பட்ட) அவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தங்கள் சகோதரர்களுக்கு கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தை தடுங்கள்!"
Tamil Translation - Omar Sharifஅ(ந்த நயவஞ்சகமுடைய)வர்கள் (தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (போரில் கொல்லப்பட்ட) தங்கள் (முஃமினான) சகோதரர்கள் பற்றி, “இவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டும் மரணத்தை (அது உங்களுக்கு வரும்போது) நீங்கள் தடு(த்துப்பாரு)ங்கள்!’’
Tamil Translation - Abdulhamid Baqawi168. இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!''