caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 144

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:144

وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِن قَبْلِهِ ٱلرُّسُلُ أَفَإِي۟ن مَّاتَ أَوْ قُتِلَ ٱنقَلَبْتُمْ عَلَىٰٓ أَعْقَٰبِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَىٰ عَقِبَيْهِ فَلَن يَضُرَّ ٱللَّهَ شَيْـًٔا وَسَيَجْزِى ٱللَّهُ ٱلشَّٰكِرِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் சென்றுவிட்டனர். அவர் இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான்.
Tamil Translation - Omar Sharifமுஹம்மத் ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi144. முஹம்மது (நபி) ஒரு தூதரே தவிர வேறில்லை. (ஆகவே, அவர் மரணமற்ற இறைவன் இல்லை.) அவருக்கு முன்னரும் (இவ்வாறே) (பல) தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டுவிட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கிவிட மாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70