caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 143

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:143

وَلَقَدْ كُنتُمْ تَمَنَّوْنَ ٱلْمَوْتَ مِن قَبْلِ أَن تَلْقَوْهُ فَقَدْ رَأَيْتُمُوهُ وَأَنتُمْ تَنظُرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டமாக, (ஜிஹாதில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசை வைத்துக் கொண்டிருந்தீர்கள். (இப்போது) அதைப் பார்த்தும் விட்டீர்கள். நீங்களோ (அதை கண்களாலும்) காண்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், திட்டவட்டமாக, (போரில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசைப்படுபவர்களாக இருந்தீர்கள். ஆக, (இப்போது) அதை நீங்கள் கண்கூடாக பார்த்தும் விட்டீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi143. நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்துவிட்டீர்கள். (ஆகவே, இந்த போரில் ஏன் தயங்குகிறீர்கள்?)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70