وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ كِتَٰبًا مُّؤَجَّلًا وَمَن يُرِدْ ثَوَابَ ٱلدُّنْيَا نُؤْتِهِۦ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ ٱلْـَٔاخِرَةِ نُؤْتِهِۦ مِنْهَا وَسَنَجْزِى ٱلشَّٰكِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வின் அனுமதியுடன், காலம் குறிக்கப்பட்ட விதிக்கு ஏற்பவே தவிர மரணிப்பது (எந்த) ஓர் ஆத்மாவிற்கு(ம்) சாத்தியம் இல்லை. எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம் நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எந்த ஓர் ஆன்மாவும் மரணிப்பது சாத்தியம் இல்லை, அல்லாஹ்வின் அனுமதியுடன் காலம் குறிக்கப்பட்ட விதியின் படியே தவிர. இன்னும், எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi145. ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.