caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 76

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:76

إِنَّ قَٰرُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ فَبَغَىٰ عَلَيْهِمْ وَءَاتَيْنَٰهُ مِنَ ٱلْكُنُوزِ مَآ إِنَّ مَفَاتِحَهُۥ لَتَنُوٓأُ بِٱلْعُصْبَةِ أُو۟لِى ٱلْقُوَّةِ إِذْ قَالَ لَهُۥ قَوْمُهُۥ لَا تَفْرَحْ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْفَرِحِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக காரூன் மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவன் அவர்கள் மீது அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் பொக்கிஷங்களிலிருந்து கொடுத்தோம். அவற்றின் சாவிகளை பலமுள்ள கூட்டம் சிரமத்தோடு சுமக்கும். அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: அவனுடைய மக்கள் அவனுக்கு கூறினர்: பெருமிதம் (மமதை) கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமிதப்படுவோரை (மமதை கொள்வோரை) நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக காரூன் மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். ஆக, அவன் அவர்கள் மீது அளவு கடந்து அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் (பல) பொக்கிஷங்களிலிருந்து எதை நாம் கொடுத்தோமோ அதன் சாவிகளை பலமுடைய கூட்டத்தினர் சிரமத்தோடு சுமந்து செல்வார்கள். அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “அவனுடைய மக்கள் அவனுக்கு (அறிவுரை) கூறினார்கள், (காரூனே!) மகிழ்ச்சியில் மமதை கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் மகிழ்ச்சியில் மமதை கொள்வோரை நேசிக்க மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi76. காரூன் (என்பவன்) மூஸாவுடைய சமுதாயத்தில் உள்ளவனாக இருந்தான். எனினும், அவர்கள் மீது அவன் அநியாயங்கள் செய்யத் தலைப்பட்டான். ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குக் கொடுத்திருந்தோம். அவற்றின் சாவிகளை மாத்திரம் பலசாலிகளான எத்தனையோ பேர்கள் மிக்க சிரமத்தோடு சுமக்க வேண்டியிருந்தது. (இத்தகைய நிலையில் அவனை நோக்கி) அவனுடைய மக்கள் ‘‘ நீ (கர்வத்துடன்) மகிழ்ச்சி அடையாதே! (கர்வம் கொண்டு) மகிழ்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதில்லை'' என்றும்,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70